Sunday, August 11, 2013

Pals Tamil e-Dictonary Free Download

PALS Tamil e-DICTIONARY
PALS e-DICTIONARY
ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ்
Pals e-Dictionary என்பது ஒரு குறுவட்டிலுள்ள ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி.
இந்த அகராதி சுமார் 22,000 முக்கிய சொற்களையும் மற்றும் 35,000 வழி சொற்களையும் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு சொற்களின் பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களும் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் அதற்கான சொற்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகராதியில் சில பயனுள்ள தகவல்களான சுருக்கங்கள்இயல்பில்லா வினைச்சொற்கள்கோணங்களின் ஒப்பீடு மற்றும் கிரேக்க எழுத்துக்கள் போன்றவை உள்ளன.
e-Dictionary ஒரு உலாவும் நிரலையும் தேடும் நிரலையும் கொண்டுள்ளது.
உலாவும் நிரல் ஒருவரை அகராதியின் பக்கங்களை புத்தக வடிவினை போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அகராதியை உலாவும் போது ஒருவர் புல்லாங்குழல் வித்வான் ஷாஷன்க்கின் இசையைக் கேட்டுக் கேட்டே உலாவலாம்.
தேடும் நிரல் ஒரு பயனருக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம்.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ்99 விசைப்பலகை மற்றும் TAM எழுத்துரு குறிமுறை தரப்படுத்தல் தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
PALS Tamil e-DICTIONARY

விண்டோஸுக்கு:
  • நிறுவல் தகவல்கள்
  • -(73 எம்பி)
    • இந்த தகவல்களை பின்பற்றி மென்பொருளை நிறுவவும் :
    • Pals-Tamil-e-Dictionary.zipஐ கீழேயுள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கி உங்கள் கணினியில் ஒரு அடைவில் சேமிக்கவும்.
    • zip கோப்பு சேமிக்கப்பட்ட அடைவுக்குச் செல்லவும்.
    • zip கோப்பினை பிரித்தெடுக்கவும்
    • பால்ஸ் தமிழ் e-அகராதி கோப்புறையை திறக்கவும்
    • பால்ஸ் தமிழ் e-அகராதி கோப்புறையை திறக்கவும்
    • Setup.exe நிரலை அதன் சின்னத்தை இரட்டை சொடுக்குவது மூலம் இயக்கவும்.
    • நிறுவலுக்கு பின் கணினியை மீண்டும் துவக்கவும்.
    • பணிப்பட்டையில் Start பொத்தானை கிளிக் செய்யவும்.
    • Programs -> Pals Tamil e-Dictionary -> Tamil e-Dictionary என தேர்ந்தெடுக்கவும்
    • அகராதியைப் பயன்படுத்த தேவையான அனைத்து தகவல்களும் மென்பொருளிலேயே உள்ளது
    •  (73 எம்பி)

பகுதிகளாக பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும். அனைத்து பகுதிகளையும் பதிவிறக்கி ஒரு அடைவில் சேமிக்கவும். பதிவிறக்கிய பின் இங்கிருந்து பதிவிறக்கவும்: 1 2 3 4 5 6 7 8 (ஒவ்வொன்றும் 10 எம்பி).

தமிழ் – ஆங்கிலம்:
Pals e-Dictionary என்பது ஒரு குறுவட்டிலுள்ள தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி.
இந்த அகராதில் 49000க்கும் அதிகமான சொற்கள் உள்ளதுஇதிலும் ஒரு உலாவும் முறைமை மற்றும் ஒரு தேடும் முறைமையைக் கொண்டுள்ளது
உலாவும் முறைமை ஒருவரை அகராதியின் பக்கங்களை புத்தக வடிவினை போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தேடும் நிரல் ஒரு பயனருக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம்.
தேடும் முறைமையில் இன்னொரு வசதி என்னவென்றால் வேர் சொற்களின் பொருளை ஒருவர் பெறலாம்.
ஒருவர் ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைமைக்கு தேவையான பொத்தானை கிளிக் செய்வது மூலம் மாற்றலாம்.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ்99 விசைப்பலகை மற்றும் TAM எழுத்துரு குறிமுறை தரப்படுத்தல் தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
பழனியப்பா பிரதர்ஸ் நியூ 25, 
பீட்டர்ஸ் ரோடு சென்னை - 600 014.தொலைபேசி: 91-44-28132863. மின்னஞ்சல்: sales@palbrothers.comஇணையதளம் :www.palbrothers.com
தமிழ் எழுத்துருக்கள் :
TTF (ட்ரூ டைப் எழுத்துரு) எழுத்துருக்கள் வின்டோஸ் 95/ வின்டோஸ் 98/ வின்டோஸ்  NT  ப்ளாட்பாரம் உள்ள கணினிகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. வின்டோஸ்  2000/XP/2003 மற்றும் லினக்ஸ் ப்ளாட்பாரம் உள்ள கணினிகளுக்காக OTF (ஓப்பன் டைப் எழுத்துருக்கள்) வெளியிடப்பட்டுள்ளன. இந்த முயற்சி முதல்முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் பல வர்ட் பிராசஸர்களால்  (உள்ளவை மற்றும் புதியவை) இந்த எழுத்துருக்களை பயன்படுத்தமுடியும்.  தமிழ்நெட்/தமிழ் 99 மற்றும் தட்டச்சு விசைப்பலகைகள் உள்ள பயனர்களுக்கு தட்டச்சு செய்வதற்கு பயன்படுத்த இதன் மூலம் பலவித எழுத்துருக்கள் கிடைக்கும்.

ஓப்பன்டைப் எழுத்துரு என்பது ஓப்பன் டைப் ஸ்பெசிபிகேஷனுக்கு ஏற்ப இருக்கும் டிஜிட்டல் எழுத்துருக்கள். ஓப்பன்டைப் எழுத்துருக்கள் சிக்கலான எழுத்துமுறைமைகளுக்கு தேவைப்பட்ட உயர்தர தட்டச்சு அம்சங்களை அளிக்கின்றது  பிராம்மி மற்றும் செமான்டிக் மொழி போன்ற ஸ்க்ரிப்டுகளுக்கு.  ஓப்பன்டைப் ஸ்பெசிபிகேஷன் எழுத்துக்களின் இணைப்புருகளுக்கு,  எழுத்துகளின் இட அமைப்புமாற்று எழுத்துக்கள் மற்றும் மற்ற மாற்றமைப்புகளை ஆதரிக்கிறது. ஓப்பன்டைப் எழுத்துருக்களில் இரு-பரிமாண க்லிஃப் இட அமைப்பு மற்றும் க்லிஃப் இணைப்புகளை ஆதரிக்கும் விவரங்களும் இருக்கலாம்.
.ஓப்பன்டைப் எழுத்துருக்கள் ஸ்கிரிப்ட் பிராசஸிங்க் லைபரரி மற்றும் மற்றும் ஓப்பன் டைப் லைப்ரரி சர்வீசஸ்களுடன்< (OTLS) சேர்ந்து பயன்படுத்தப்படுகிறது. OTLS என்பது உரை-பிராசஸிங் உதவி செயற்நிரல்களின் ஒரு கோவை.  வின்டோஸ் ஆபரேட்டிங் ஸிஸ்டத்தில், Uniscribe  மற்றும் OLTS  ஆபரேட்டிங் ஸிஸ்டம் லைப்ரரிகளின் பாகங்கள்.
GIST-DVOT/GIST-TMOT என்பவை சி-டாக்கின் ஜிஸ்ட் க்ரூப் தயாரித்த தேவ்நகரிதமிழ் ஸ்கிரிப்டு வகைகள். தேவ்நக்ரி ஸ்கிரிப்டை பயன்படுத்தும் மொழிகள் - ஹிந்திமராத்தி ஆகியவை இந்த எழுத்துருவை பயன்படுத்தலாம். தேவ்நக்ரி ஸ்கிரிப்டின் விசேஷ அம்சங்களான , ‘akhands’ (கூட்டெழுத்துக்கள்),  ‘nukta’, எழுத்துக்களை மறுவரிசைப்படுத்துவது மற்றும் இடம் அமைப்பதுகீழே வரும் வடிவங்கள்அரை வடிவங்கள் ஆகியவை இந்த எழுத்துருக்களில் தரப்பட்டுளன.  இந்த எழுத்துருவின் க்லிஃப் கோவைகள் தலைசிறந்த பலனை அளிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன.

எழுத்துருக்கள் பொருளடக்கங்களை உருவாக்க மற்றும் காண்பிப்பதற்கு என்றே விசேஷமாக கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன.  எழுத்துருவின் க்லிஃப்களின் அளவு ஒரே அளவில் அமைக்கப்பட்டிருப்பதால் எழுத்துருவை படிப்பது மேம்பட்டு உள்ளது. எழுத்துருவை எம்பெட் செய்யலாம் என்பதால்இந்த எழுத்துரு மூலம் நிலையான வலைய பொருளடக்கத்தை தயாரித்துஎந்த விதமான பதிவிறக்கமும் செய்யாமலேயே உலாவியில் காண்பிக்கலாம்.
Target application areas:
பயன்படக்கூடிய இடங்கள்:
  • இந்திய மொழி வலைய பொருளக்கத்தின் தயாரிப்பதில்
  • இந்திய மொழியை ஆதரிக்கும் டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை தயாரிப்பதில்
  • யூனிகோட் ஆதாரத்தில் இந்திய மொழி தேடல் எஞ்சின்களை தயாரிப்பதில்

பல மொழி கருவிகளுக்கு இந்திய மொழி தொகுப்புகளை அதாவது கார்பஸை தயாரிப்பதில்.

No comments:

Post a Comment